பிரிட்டனில் 1990-களில் உருவான ‘சீர்ப்படுத்தும் கும்பல்கள்’ என்பது இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கடத்தி, பாலியல் ரீதியாகச் சுரண்டும் ஒரு பயங்கரமான குற்றக் கும்பலாகும்.
அண்மையில் லண்டனில் 16 வயது சீக்கியப் பெண் ஒருவரைப் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணை உள்ளூர் சீக்கிய இளைஞர்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மீட்டதைத் தொடர்ந்து, இந்தக் கும்பல்களின் கொடூரம் மீண்டும் உலக அளவில் விவாதமாகியுள்ளது.
இந்தக் கும்பல்கள் பெரும்பாலும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதும், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சிறுமிகளை இவர்கள் சீரழித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இனவெறிப் புகார் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்கிய நிலையில், தற்போது இங்கிலாந்து அரசு இவர்களுக்கு எதிராகக் கடும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
🚨🇬🇧 Meanwhile in London
“We know you’re there – how would you feel if this was your daughter?”
“We are Sikhs and we are standing together”
After a 16-year-old Sikh Girl was gang-raped by a bunch of Pakistani men, the local community simply tried talking to the rapist… pic.twitter.com/SEsk1rn0tM
— Concerned Citizen (@BGatesIsaPyscho) January 14, 2026
“>
குறிப்பாக ரோதர்ஹாம், ரோச்டேல் போன்ற நகரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ள அரசு, இதை ஒழிக்கத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
