அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அங்குள்ள குடியேற்றக் கொள்கைகள் குறித்து உலகளவில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்திய வீதிகளில் டொனால்ட் ட்ரம்பைப் போல வேடமணிந்து ‘ஹெச்1-பி’ விசாக்களை விற்பனை செய்வது போன்ற பகடி வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் டொனால்ட் ட்ரம்பின் குரல் மற்றும் உடல்மொழியை அச்சுப்பாலாகப் பிரதிபலிக்கும் அந்த நபர், ஒரு விசா 1,00,000 டாலர் என விலை பேசி இந்தியர்களிடம் வேடிக்கையாக உரையாடுகிறார். “நேரடியாக என்னிடமே விசா பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறுவதும், அங்கிருப்பவர்கள் ஆச்சரியத்துடனும் சிரிப்புடனும் அதனைப் பார்ப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் வெளியிட்டுள்ள இந்தச் செய்தியின்படி, அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெறுவதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் ட்ரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை நையாண்டி செய்யும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் இந்த விசா முறை மிகவும் முக்கியமானது என்பதால், இந்தியாவிலேயே இத்தகைய ஒரு பகடி வீடியோ எடுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நகைச்சுவைக்காகச் செய்யப்பட்டாலும், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலையும் இந்தியர்களின் விசா கனவுகளையும் இது பிரதிபலிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
