இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ‘5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற முழக்கங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஏழைகளின் உண்மையான வலியைப் பேசுகிறது இந்த வைரல் வீடியோ. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், ஒரு முதியவர் கண்ணீர் மல்கப் பேசும் காட்சிகள் இதயத்தை உலுக்கும் விதமாக உள்ளன. ​”எனக்கு மெகா சிட்டிகளோ (Mega Cities) அல்லது புல்லட் ரயில்களோ தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு, தங்குவதற்கு ஓரிடம், உழைப்பதற்கு ஒரு வேலை… இது இருந்தால் போதும்” என்று அந்த முதியவர் அழுதுகொண்டே கூறுகிறார்.

பெரிய திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் இருப்பிடம் இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை இந்த முதியவரின் கண்ணீர் அம்பலப்படுத்துகிறது. வளர்ச்சி என்பது கோபுரங்களில் மட்டுமல்ல, ஏழைகளின் அடுப்பங்கரையிலும் இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ உரக்கச் சொல்கிறது.