திருமண விழாவின் போது கேக் வெட்டும் நிகழ்வில் மணமகன் செய்த அதிர்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வழக்கமாக மகிழ்ச்சியாக நடக்கும் இந்த தருணத்தில், மணமகன் கேக்கை ஒரு வாய் சுவைத்தவுடன், திடீரென ஆத்திரமடைந்து அதைத் தூக்கி எறிந்தார்.

மணமகனின் இந்த எதிர்பாராத கோபத்தைக் கண்டு அருகில் நின்ற மணப்பெண் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். “இது திருமணமா அல்லது கட்டாயத்தின் பேரில் நடக்கும் சமரசமா?” எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கேக்கின் சுவை பிடிக்காததால் அவர் அப்படி செய்தாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணமா எனப் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.

“>

 

திருமணங்களில் இதுபோன்ற எதிர்பாராத மற்றும் சங்கடமான தருணங்கள் நடப்பது அரிது என்பதால், இந்த வீடியோ தற்போதைய ட்ரெண்டிங் தலைப்பாக மாறியுள்ளது.