அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த கேத்தரின் என்ற பெண்ணின் விசித்திரமான உணவுப் பழக்கம் தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உணவை வாய் வழியாகச் சாப்பிடாமல், மூக்கின் வழியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.

கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் விளையாட்டாகச் செய்த ஒரு பந்தயத்தில் தொடங்கிய இந்தப் பழக்கம், இப்போது அவருக்கு அடிமையாகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆம்லெட், காபி, காரமான மெக்சிகன் உணவுகள் என அனைத்தையும் நன்றாக அரைத்து, ஒரு குழாய் மூலம் தனது மூக்கின் வழியாகவே உட்கொண்டு வருகிறார்.

கேத்தரினின் இந்த விசித்திரமான செயலால் அவரது காதலன் உட்பட பலரும் திகைத்துப் போயுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூக்கின் வழியாக உணவைச் செலுத்துவது நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் சுவாசப் பாதையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by TLC (@tlc)

“>

மருத்துவர்களின் அறிவுரைகளைக் கேட்க பயமாக இருந்தாலும், இந்தப் பழக்கத்தை கைவிடுவது தனக்கு எளிதாக இல்லை என்று கேத்தரின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.