ஐரோப்பா என்றாலே அழகான கட்டிடங்கள் மற்றும் சுத்தமான வீதிகள் என்று கனவு காணும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, பயண வலைப்பதிவர் பிரதீக் சிங்கின் வீடியோ ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது. ஆஸ்திரியாவில் இருக்கும் அவர், “ஐரோப்பாவின் யதார்த்தம்” என்ற பெயரில் வெளியிட்ட வீடியோவில், பல நகரங்களின் தெருக்கள் சுத்தமாக இல்லை என்றும், சுற்றுலாத் தலங்கள் அதிக கூட்ட நெரிசலுடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக ரீல்களில் காட்டப்படும் கவர்ச்சிக்கும் நிஜ வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், சில பகுதிகள் பாதுகாப்பற்றதாகத் தோன்றுவதாகவும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பலரும் ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகள் ஐரோப்பாவை விடச் சிறந்தது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே சமயம், ஒரு நாட்டின் குறைகளைச் சொல்வது அந்த நாட்டை இழிவுபடுத்துவது அல்ல என்றும், சுற்றுலா செல்பவர்கள் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் பிரதீக் விளக்கம் அளித்துள்ளார்.
View this post on Instagram
“>
வெளிநாடுகளின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது போலவே, நம் நாட்டின் மீதும் நாம் அதே நேர்மையைக் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
