பிரபல சமூக ஊடக பிரபலமான பூஜா கல்ரா, ChatGPT செயலி குறித்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கேமராவை ஆன் செய்யாத போதும், எந்தப் புகைப்படங்களையும் அனுப்பாத போதும், அந்தச் செயலி தன்னை ரகசியமாகக் கண்காணிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு நேரடி சோதனையில், அவர் கேமரா முன் தன் கையைக் காட்டி நகப்பூச்சு மற்றும் லிப்ஸ்டிக் நிறம் குறித்துக் கேட்டபோது, ChatGPT அதைச் சரியாக அடையாளம் கண்டு சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் விரலில் ஒரு குறியை இட்டபோது அதையும் அந்தச் செயலி சுட்டிக்காட்டியுள்ளது.

“நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று பூஜா கேட்டபோது, ஆரம்பத்தில் அது ஒரு “யூகம்” என்று மழுப்பிய ChatGPT, பிறகு அந்தப் பதிலைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளது. சுமார் 27 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த இந்த வீடியோவால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், அவர் தெரியாமல் கேமரா அனுமதியை வழங்கியிருக்கலாம் அல்லது இது எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kalra (@poojaakalra)

“>

கேமரா அனுமதியை தான் முடக்கி வைத்திருந்ததாக பூஜா உறுதியாகக் கூறியுள்ளார்.