பீகார் மாநிலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தன்னை விட வயது குறைந்த இளைஞருடன் வீட்டை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அமர்பூர் பேருந்து நிலையத்தில் பெரும் மோதலாக உருவெடுத்தது.
அந்தப் பெண் மற்றும் இளைஞரை பேருந்து நிலையத்தில் கண்டறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி சரமாரியாகத் தாக்கினர். பொதுமக்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், இருவரும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும், தங்கள் விருப்பப்படியே வாழ்வதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வயதான பெண்மணி ஒரு இளைஞருடன் ஓடிச் சென்றதும், அதன்பின்னர் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவமும் பீகாரில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
