சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பணியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் ஒரு காவலர், இந்தப் பணியின் சிறப்பம்சங்களை விளக்கியுள்ளார்.
டெல்லி போலீஸில் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு எஸ்.ஐ இணையான ஊதியம் இந்தப் பணியில் வழங்கப்படுவதாகவும், அதே வேளையில் மற்ற பணிகளுடன் ஒப்பிடும்போது இங்கு பணிப்பளு மிகவும் குறைவு என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இது குறிப்பாக, ஆண்டு முழுவதும் கிடைக்கும் தாராளமான விடுமுறை நாட்கள் மற்றும் வேலை நேரத்தில் கிடைக்கும் நிம்மதி ஆகியவை இந்தப் பணியை இளைஞர்களிடையே மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியுள்ளது. இந்தப் பணியின் மற்றொரு முக்கிய அம்சம், டெல்லி போன்ற பெருநகரங்களில் நிலையான வேலை நேரமும், தேவையற்ற அலைச்சல்கள் இல்லாத பணிச்சூழலும் அமைவதாகும்.
மேலும் காவல் துறையில் பொதுவாக இருக்கும் மன அழுத்தம் இன்றி, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் ஒரு சீரான அட்டவணையைப் பின்பற்ற முடிவதே இதன் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. சம்பளம், கௌரவம் மற்றும் ஓய்வு ஆகிய மூன்றையும் சமமாக எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்களுக்கு இந்த ‘சொகுசான’ அரசுப் பணி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதை இந்த வைரல் வீடியோ தெளிவுபடுத்துகிறது.
