நெல்லை டவுன் பகுதியை உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் அது. அதாவது  மைதீன் கானின் மகன் செய்யது பீர் முகமது (30). பெயிண்டிங் வேலை செய்துவரும் இவர், தற்போது டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் அளவுக்கு நெருக்கம் அதிகமாகியுள்ளது.

சம்பவத்தன்று, வழக்கம்போல் அந்தப் பெண்ணின் 4 வயது மகளை தனியார் பள்ளியிலிருந்து தனது பைக்கில் அழைத்து வரச் சென்றுள்ளார் செய்யது பீர் முகமது. சிறுமியைப் பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு பைக்கில் திரும்பும்போது, அந்தப் பிஞ்சு குழந்தை வழியில் இயல்பான மழலைச் சேட்டைகளைச் செய்துள்ளது. ஒரு சிறு குழந்தையின் குறும்புத்தனத்தை ரசிக்க வேண்டிய அந்த நபர், ஆத்திரமடைந்துள்ளார்.

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத அவர், பிஞ்சுச் சிறுமியைக் கடித்துத் துன்புறுத்தியதுடன், பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் நடந்த கொடூரத்தை நினைத்து அழுதுகொண்டே தனது தாயிடம் அந்தப் பச்சிளம் குழந்தை நடந்துகூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ந்துபோன தாய், கதறி அழுதபடியே உடனடியாக டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு, பீர் முகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மழலை மாறாத ஒரு குழந்தையின் பாதுகாப்புக் கேள்விகறியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.