ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது குழந்தையை விடுவதற்காகத் தந்தை ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஒரு குழந்தையை மட்டும் பள்ளியில் விடுவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சென்றபோது, மற்றுமொரு குழந்தை வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தது.
Jodhpur, RJ: CCTV shows a father dropping his elder daughter when the younger child accidentally twisted the scooty’s accelerator, causing an accident.
Outside Elite Children Academy, near Dali Bai Chauraha. pic.twitter.com/9Fp4WARGvA
— Deadly Kalesh (@Deadlykalesh) January 11, 2026
அப்போது எதிர்பாராதவிதமாக அக்குழந்தை வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கும் பிடியை வேகமாகத் முடுக்கியதால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சீறிப்பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலை குறித்துத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோரின் இத்தகைய கவனக்குறைவான செயல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
