இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன புதிய ரயில்கள் பயணிகளின் வசதிக்காகப் பல மேம்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு புதிய ரயிலின் தளம் மற்றும் உட்புறப் பகுதிகளைப் பயணிகள் மிக மோசமாகக் கையாண்டு, குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டி ரயிலையே ஒரு குப்பைத் தொட்டி போல மாற்றியுள்ளனர்.

இதனால் ரயிலின் தரையமைப்பு சிதைக்கப்பட்டு, பார்ப்பதற்கே அருவருப்பான நிலையில் இருக்கும் இந்தக் காட்சிகளைக் கண்டு சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுச்சொத்துக்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கப் புதிய வசதிகளைச் செய்தாலும், பயணிகளின் இத்தகைய அலட்சியப்போக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

“>

மேலும் ரயிலின் சுகாதாரத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் இடைஞ்சல் தரும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ, நாம் இன்னும் பொது இடங்களில் நாகரீகமாக நடந்துகொள்ளப் பழகவில்லை என்பதையே வேதனையுடன் உணர்த்துகிறது.