ஏழு பச்சிளம் குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரிட்டன் செவிலியர் லூசி லெட்பிக்கு, சிறையில் புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இவர், ஆரம்பத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
தற்போது இவரது நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, சிறை நூலகத்தில் புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளை விநியோகிக்கும் நூலகர் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இது ஒரு கௌரவமான பணியாகக் கருதப்படுகிறது.
தனக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய பொறுப்பால் லூசி மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகை சிறையிலுள்ள மற்ற கைதிகளிடையே பொறாமையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது நண்பர்களுக்குப் பிடித்தமான புத்தகங்களைக் கொடுத்துச் சலுகை காட்ட வாய்ப்புள்ளதாகச் சக கைதிகள் கருதுகின்றனர். அதிகாரிகளிடம் மரியாதையாக நடப்பதாலும், சிறை விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதாலும் அவருக்கு இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
