அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், 37 வயதான ரெனீ நிக்கோல் குட் என்ற தாய், கடந்த ஜனவரி 7-ம் தேதி ஐசிஇ அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரெனீயின் கார் மோதியதால் தற்காப்பிற்காகச் சுட்டதாக அதிகாரிகள் கூறினாலும், அங்கிருந்த கேமரா காட்சிகளில் அவர் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகப் பேசியது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ரெனீயின் மரணத்திற்கு நீதி கேட்டுப் பெண் ஒருவர் கதறி அழுது வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்தப் பெண் தனது கையில் ரெனீயின் பெயரை எழுதிக்கொண்டு, அழுதுகொண்டே அவரது பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லி முழக்கமிடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலர், இது அந்தத் தாயின் மரணத்திற்காக வெளிப்படுத்தப்பட்ட உண்மையான துக்கம் என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் சிலர் அந்தப் பெண்ணின் மனநிலையை விமர்சித்தும், கிண்டல் செய்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
😐
— Breaking911 (@Breaking911) January 11, 2026
“>
ரெனீயின் மரணம் மற்றும் இந்த வீடியோ என இரண்டும் தற்போது அமெரிக்காவில் நீதி மற்றும் மனநலம் குறித்த பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.
