உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் வீதிகளில், பீகாரைச் சேர்ந்த ஒரு நபர் டீ மற்றும் போஹா விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் இருந்தாலும், தனது பீகார் அடையாளத்தை மறைக்காமல், ஹிந்தியில் பேசியபடி கம்பீரமாக அவர் வியாபாரம் செய்வது பலரையும் கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by प्रभाकर Prasad (@chaiguy_la)

ஆனால், அவர் விற்கும் உணவுகளின் விலையைக் கேட்டுத்தான் இந்திய நெட்டிசன்கள் தலைசுற்றிப் போயுள்ளனர். அங்கு ஒரு கப் டீயின் விலை சுமார் 782 ரூபாய் ($8.68), ஒரு பிளேட் போஹாவின் விலை சுமார் 1,512 ரூபாய் ($16.8). அதாவது 5 பிளேட் போஹா வாங்கினால், இந்தியாவில் ஒரு சராசரி மனிதனின் மாத சம்பளமே முடிந்துவிடும்!

லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் கடை வாடகை மற்றும் இதர செலவுகள் மிக அதிகம் என்பதால் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

“நம்ம ஊர்ல 10 ரூபாய்க்கு கிடைக்கிற டீ அங்க இவ்வளவு விலையா?” என ஆச்சரியப்படும் நெட்டிசன்கள், அதேசமயம் அந்த இளைஞரின் கடின உழைப்பையும், தனது கலாச்சாரத்தை அந்நிய மண்ணில் பெருமையுடன் பிரதிபலிப்பதையும் பாராட்டி வருகின்றனர்.