தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இப்போது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அந்தப் புகைப்படத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கஞ்சா வழக்கில் கைதான ஒரு பெண்ணுடன் அருகில் நிற்கிறார். இதனைச் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்சா நடமாட்டமே இல்லை என்று கூறி வந்த அமைச்சர், இப்போது கஞ்சா வியாபாரியுடன் போஸ் கொடுக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி ஒருவர், நேற்று முன்தினம், 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், தமிழ்நாட்டில் “கஞ்சா நடமாட்டமே இல்லை” என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர்… pic.twitter.com/n8zGKebiZr
— K.Annamalai (@annamalai_k) January 10, 2026
ஏற்கனவே பாலியல் குற்றவாளி ஞானசேகரனுடன் அமைச்சர் இருக்கும் புகைப்படம் வெளியானபோது, அதற்கு அவர் மழுப்பலாகப் பதிலளித்ததாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, “தற்போது இந்த கஞ்சா வியாபாரி விவகாரத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆளுங்கட்சி அமைச்சருக்கும் சட்டவிரோத கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் இந்த ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
