மும்பையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுத்து, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்காக, கொலை முயற்சி வழக்கில் சிக்கி தான் 45 நாட்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக அந்த இளைஞர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது வெளியே சத்தம் கேட்டுச் சென்ற தான், மனிதாபிமான அடிப்படையில் உதவியும் போலீசார் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் கழித்த கடினமான நாட்களைப் பற்றிப் பேசிய அந்த இளைஞர், அங்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த உணவுகள் மற்றும் மோசமான சூழலைப் விவரித்தார்.
View this post on Instagram
“>
இருப்பினும், சக கைதிகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தும், கால்பந்து போட்டிகளை நடத்தியும் அங்குள்ள சூழலைச் சமாளித்ததாக அவர் கூறினார். குறிப்பாக, “வெயிலே படாததால் நான் சிறையிலிருந்து வரும்போது இன்னும் சிவப்பாக மாறிவிட்டேன்” என்று அவர் நகைச்சுவையாகக் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு இன்னல்களைச் சந்தித்த பிறகும் அவர் காட்டும் நேர்மறையான அணுகுமுறையைக் கண்டு நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
