உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மாக் மேளா’ (Magh Mela) திருவிழாவில், வெறும் வேப்பங்குச்சிகளை (Datun) விற்று ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பாதிக்கும் இரண்டு சகோதரிகளின் கதை இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஜிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு சகோதரிகள், அதிகாலை 3 மணிக்கே தங்களது வியாபாரத்தைத் தொடங்கிவிடுகின்றனர். விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் புனித நீராடிவிட்டு பற்களைத் துலக்க இந்த இயற்கை வேப்பங்குச்சிகளையே அதிகம் நாடுகின்றனர்.
मेरा उत्तर प्रदेश बम बम कर रहा है….
पहले कुंभ मेले मे लोगो ने छोटे छोटे कम लागत वाले व्यापार कर के कमाया
अब इस बार पुनः गाजीपुर के दो महिलाये दातुन बेचकर 10000 रुपये तक का काम कर चुकी है…
पहले की सरकार मे बस अव्यवस्था थी अराजकता थी कोई सोच भी नहीं सकता था महिलाये घर से… pic.twitter.com/f0jZuXU4DS
— Saurabh Marwadi (@SaurabhMarwadi) January 5, 2026
ஒரு நாளைக்குச் சுமார் 10,000 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இரவு பகலாக வியாபாரம் நடப்பதாகவும் அந்தப் பெண்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
கடந்த மகா கும்பமேளாவிலும் இதேபோல் கைநிறையச் சம்பாதித்த இந்தச் சகோதரிகள், இந்த முறையும் தங்களது உழைப்பால் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர். “முயற்சி செய்தால் எதிலும் ஜெயிக்கலாம்” என்பதற்கு இவர்களின் இந்த ‘வேப்பங்குச்சி வியாபாரம்’ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
