சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் ஆபத்தான முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு தவறான கலாச்சாரமாக மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மறைந்த தனது தம்பியின் சமாதிக்குச் சென்ற வாலிபர் ஒருவர், அங்கு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் சட்டவிரோத ஆயுதத்தைப் பயன்படுத்தியதோடு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பட்டாக்கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய அந்த அண்ணனை “அலேக்காக” தூக்கிய போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கையில் கத்தி ஏந்தி வன்முறையைத் தூண்டும் விதமாகச் செயல்படும் நபர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.