சென்னையில் நேற்று (ஜனவரி 5), சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் (Laptop) வழங்கும் பிரம்மாண்ட திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தைப் பாராட்டுவதற்காகப் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய விஜய் சேதுபதி, ஒரு தலைமுறைக்கு மற்ற பொருட்களைக் கொடுப்பதை விடக் கல்வியைக் கொடுப்பதே மிகச் சிறந்தது என்று குறிப்பிட்டார். இந்த அரசு நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு, கல்விக்காகத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
