இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஒரு காணொளி, வேடிக்கைக்காக நண்பர்கள் செய்யும் விளையாட்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. அந்த வீடியோவில், மூன்று நண்பர்கள் நாற்காலியில் அமர்ந்து நெருப்புக்கு முன்னால் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு நண்பர் விளையாட்டாக மற்றொரு நண்பரின் நாற்காலியை இழுத்து அவரை கீழே விழச் செய்கிறார். கீழே விழுந்த நபர், தன்னை விழச் செய்த நண்பரைப் பழிவாங்க எண்ணி, அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி வைக்கிறார்.

​சிறிது நேரம் கழித்து, விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே வந்த அந்த நண்பர், நாற்காலியில் திரவம் ஊற்றப்பட்டிருப்பதை அறியாமல் அதில் அமர்கிறார். அவர் அமர்ந்த அடுத்த நொடியே, மற்றொரு நண்பர் தீயைப் பற்ற வைக்க, அந்த இளைஞரின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிகிறது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்தத் தீ அணைக்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது. இத்தகைய விபரீதமான செயல்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும், விளையாட்டு என்ற பெயரில் எல்லை மீறுவது ஒருபோதும் சரியாகாது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.