சமூக வலைதளங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், அதிகமான பார்வைகளைப் பெறுவதற்காகவும் இளைஞர்கள் பல நேரங்களில் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் உயரமான கட்டிடத்தின் மொட்டை மாடி விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். எவ்வித அச்சமும் இன்றி காணப்படும் அவர், அடுத்த நொடியே கட்டிடத்தின் கைப்பிடிசுவரைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி ‘புஷ்-அப்ஸ்’ (Push-ups) உடற்பயிற்சியைச் செய்கிறார்.

நூலிழையில் தவறி விழுந்தால் கூட உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதை உணராமல், மிகச் சாதாரணமாக அவர் இந்தச் செயலில் ஈடுபடுவது காண்போரை பதற வைத்துள்ளது.
<a href=”http://

“>
இந்த வீடியோவை @rose_k01 என்ற பயனர் தனது பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்தியாதொடக்கநிலையாளர்களுக்கானது அல்ல’ (India is not for beginners) என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோ, குறுகிய காலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“இது உடற்பயிற்சி அல்ல, தேவையற்ற ஸ்டண்ட்” என்றும், “வெறும் ரீல்ஸ்காக உயிரைப் பணயம் வைப்பது முட்டாள்தனம்” என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம், அவரது உடற்பயிற்சி தீவிரமானது என ஒருசிலர் பாராட்டிய போலும், பெரும்பாலானோர் இது போன்ற பாதுகாப்பற்ற செயல்களை ஊக்குவிக்கக் கூடாது என்றே வலியுறுத்துகின்றனர்.