காசா பகுதியில் 15 மாதங்கள் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் பிணைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ரோமி கோனன் என்ற 25 வயது இளம்பெண், தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து முதன்முறையாக இஸ்ரேலிய தொலைக்காட்சியில் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.

 

கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இசை விழாவில் பங்கேற்றபோது கடத்தப்பட்ட அவர், சிறைபிடிக்கப்பட்டிருந்த காலத்தில் 4 வெவ்வேறு நபர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தன்னைத் தாக்கியவர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவோம் என எச்சரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது போன்ற பாலியல் வன்முறைப் புகார்கள் குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்த நிலையில், ஹமாஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், இனி யாரும் தன்னை அமைதிப்படுத்த முடியாது என்றும், தான் உயிர் பிழைத்து வந்ததே ஒரு வெற்றிதான் என்றும் ரோமி கோனன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.