இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வரும் வேளையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. லாகூர் பேருந்து நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி அந்நாட்டின் தற்போதைய அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Maahir Ram (@maahirram)

அதில், ஒரு டஜன் தட்டு வடை  200 ரூபாய்க்கும், ஒரு சமோசா 50 ரூபாய்க்கும் விற்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பழைய பேருந்துகள் மற்றும் போதிய பராமரிப்பற்ற சாலைகளுடன் காட்சியளிக்கும் அந்தப் பேருந்து நிலையத்தின் நிலைமை, பாகிஸ்தானின் பொருளாதாரம் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இக்காணொளியைக் கண்டு, பாகிஸ்தான் சுமார் நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.