நியூ ஜெர்சியில் உள்ள ஒரு பழங்கால இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில், சுமார் 6.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மேண்டலின்கள் (Mandolins) மர்மமான முறையில் திருடு போயின. ஆனால், சில நாட்களிலேயே திருடப்பட்ட அந்த கருவிகள் கடையின் வாசலில் இரண்டு பைகளில் பத்திரமாகத் திருப்பி வைக்கப்பட்டிருந்தன.

கருவிகளுடன் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அந்த நபர் விட்டுச் சென்றிருந்தார். அதில், “மன்னித்துவிடுங்கள், நான் குடித்துவிட்டு போதையில் இருந்தேன், மெர்ரி கிறிஸ்மஸ், நீங்கள் ஒரு நல்ல மனிதர்” என்று எழுதப்பட்டிருந்தது.

கருவிகளைத் திருப்பி வைத்த நபரை கடையின் உரிமையாளர் விரட்டிச் சென்றார், ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சமூக வலைதளங்களில் திருட்டு தொடர்பான காட்சிகள் பரவியதால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே அவர் கருவிகளைத் திருப்பித் தந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் இந்த விசித்திரமான திருட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.