உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கரடி ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு ஷியாம்பூர் ஹாட் சாலையில் இரண்டு இளைஞர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக எதிரே ஒரு காட்டுக்கரடி தோன்றியது.
View this post on Instagram
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் தங்களின் உயிரைக் காத்துக்கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். கரடியைக் கண்டதும் அங்கிருந்த பசுக்களும் மிரண்டு ஓடிய இந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பொதுவாக மலைக்கிராமங்களில் மட்டுமே காணப்பட்ட இத்தகைய வனவிலங்கு அச்சுறுத்தல், தற்போது ரிஷிகேஷ் போன்ற நகரங்களின் முக்கிய வீதிகளுக்கே வந்துவிட்டது வனத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், இரவு நேர நடைப்பயிற்சி சென்றவர்களுக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தை ஆச்சரியத்துடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்து வருகின்றனர்.
