சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு கிரிக்கெட் வீடியோ, தற்போது விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு இளைஞன் வீசும் பந்து, காற்றில் நம்பமுடியாத அளவிற்கு வளைந்து ஸ்டம்புகளைத் தாக்குகிறது. ஒரு சாதாரண டென்னிஸ் பந்து அல்லது பிளாஸ்டிக் பந்தில் கூட இவ்வளவு துல்லியமாகவும், வேகமாகவும் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்பதைக் கண்டு கிரிக்கெட் உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதைப் பகிர்ந்து, “இப்படிப்பட்ட பந்துவீச்சை ஒரு பேட்டர் எப்படித்தான் எதிர்கொள்ள முடியும்?” என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த இளைஞனின் திறமையை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் கூட இவ்வளவு பெரிய ‘ஸ்விங்’ கொண்டு வருவது கடினம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பயிற்சியும் சரியான வாய்ப்பும் கிடைத்தால், இந்த இளைஞன் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமாக மாறக்கூடும் எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். “இயற்பியல் விதிகளுக்கே சவால் விடுக்கும் வகையில் இந்த பந்துவீச்சு அமைந்துள்ளது” என கிரிக்கெட் ஆர்வலர்கள் அந்த இளைஞனின் திறமையை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
