இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ராகிங் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்திலேயே அந்த மாணவர் மிகக் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராகிங் கொடுமையால் ஒரு இளம் உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மற்றும் சில மாணவர்கள் உட்பட பலரின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரிகளில் ராகிங்கைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், ஆசிரியர்களே இத்தகைய செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது அலட்சியமாகவோ இருந்தது.

மேலும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கல்வி பயில வேண்டிய இடத்தில் நடந்த இந்த வன்கொடுமை குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.