திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளராக இருந்த வேலு மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களது விளைநிலத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்தபோது, மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம் பார்த்து, மர்ம நபர்கள் குடிசையை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தீ வைத்துள்ளனர். இதில் தப்பிக்க வழியில்லாமல் கணவன், மனைவி இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

​இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், திமுகவினரிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கம் போலீசார் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது திட்டமிட்ட கொலையா அல்லது இதன் பின்னணியில் அரசியல் முன்விரோதம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.