ஹரியானா மாநிலம் கர்னாலில், செவ்வாய்க்கிழமை என்பதால் இறைச்சிக் கடையைத் திறக்கக் கூடாது என்று கூறி, பஜ்ரங் தளம் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமான சிக்கன் கடையை வலுக்கட்டாயமாக மூடச் செய்துள்ளனர். இது தொடர்பான காணொளியில், கடையின் உரிமையாளர் கடையை மூடுவதும், அவருக்கு அருகே அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
Location: Karnal, Haryana
Members of Bajrang Dal and VHP forced the closure of a Muslim-owned chicken shop, citing that it was Tuesday. pic.twitter.com/eCFq4xspfd
— The Muslim (@TheMuslim786) January 1, 2026
ஒரு குறிப்பிட்ட நாளில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று தனிநபர் ஒருவரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இத்தகைய அமைப்புகள் செயல்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி கடையைத் திறக்க அனுமதி இருந்தும், மத ரீதியான காரணங்களை முன்வைத்து கடையை மூடச் சொன்னது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகிறது.
