உலகிலேயே மிகவும் அசுத்தமான நாடு எது என்று ஒரு நபர் பொதுமக்களிடம் கேட்கும் நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கேட்கப்படும் கேள்விக்கு, அங்கிருப்பவர்கள் பலரும் யோசிக்காமல் உடனடியாக “இந்தியா” என்று பதிலளிப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவின் பிம்பம் சர்வதேச அளவில் இவ்வளவு மோசமாகவா இருக்கிறது?” என்ற ஆதங்கத்துடன் இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு, பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகிறது.
Interviewer: What is the most unclean country?
Almost everyone – INDIA
India's image has never been this bad. pic.twitter.com/Hwm0Kv82aR
— Tarun Gautam (@TARUNspeakss) December 31, 2025
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், இந்தியாவின் தூய்மைப் பணிகளில் இன்னும் முன்னேற்றம் தேவை என்பதை இது காட்டுகிறது என்று கவலை தெரிவிக்கின்றனர். அதே சமயம், மற்றவர்கள் இது இந்தியாவைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் எதிர்மறையான பிம்பம் என்றும், இந்தியாவின் வளர்ச்சியையும் மற்ற பக்கங்களையும் உலகம் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் வாதிடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இந்திய இணையவாசிகள் மத்தியில் ஒரு சுயபரிசோதனைக்கான களமாக மாறியுள்ளது.
