சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பசியால் தவித்த கர்ப்பிணி நாய் ஒன்றிற்குச் சாலையோர உணவு விற்பனையாளர் ஒருவர் காட்டிய தாராள மனப்பான்மை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்துள்ளது.
வழக்கமாக வீடுகளில் மிஞ்சிய உணவையே விலங்குகளுக்கு வழங்கும் நிலையில், தனது கடையை எதிர்நோக்கி நின்ற அந்த வாயில்லா ஜீவனின் நிலையறிந்து, எவ்வித தயக்கமுமின்றி தட்டில் புதிய உணவைப் பரிமாறிய அந்த வியாபாரியின் செயல் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, “கருணை எப்போதும் விலைமதிப்பற்றது” என்ற வாசகத்துடன் வைரலாகி வருவதுடன், இக்காலத்திலும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்துவதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
<a href=”http://
This street vendor noticed a hungry pregnant stray and didn’t think twice 🥹
Kindness may feel undervalued these days but it will always be priceless ❤️pic.twitter.com/KemGwnKY0o
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) December 31, 2025
“>
மனிதர்களிடம் மட்டுமன்றி, பிற உயிரினங்களிடமும் சமமான அன்பைக் காட்டும் இத்தகைய மனிதர்களே இந்த உலகை இன்றும் அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும்.
