உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது மரணத்திற்கு முன்னதாக வெளியிட்ட உருக்கமான வீடியோவில் ஆகாஷ் என்ற இளைஞர் தான் தனது இந்த முடிவிற்கு காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“तुमने मुझे इतना मजबूर कर दिया कि अब मेरे पास मरने के सिवाय कोई रास्ता नहीं बचा है. आई एम सॉरी मम्मी. तुम दुनिया की बेस्ट मम्मी हो. आकाश की वहज से मुझे सुसाइड करने पर मजबूर होना पड़ रहा है.”
यह सब कहते हुए लड़की ने वीडियो बनाया फिर सुसाइड कर लिया. घटना यूपी के हाथरस का है. pic.twitter.com/1pQPFIZ4H3
— Priya singh (@priyarajputlive) December 31, 2025
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான அந்த இளைஞர் தனது வாழ்க்கையோடு விளையாடிவிட்டதாகவும் தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தனது தாயிடமும் சித்தியிடமும் மன்னிப்புக் கோரிய அந்தப் பெண் தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதை மிகுந்த மன வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் மனம் விட்டுப் பேசுவதன் அவசியத்தை இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
