சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பலருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. ஒரு ஜிம்மில் துப்புரவுப் பணியாளர் போல வேடமணிந்து வந்த நபர், அங்குள்ள பாடிபில்டர்களால் உருவக்கேலி செய்யப்படுகிறார்.

அவர் பார்ப்பதற்குச் சாதாரணமாகவும், பலவீனமாகவும் இருந்ததால், அங்கிருந்த பலசாலிகள் அவரை ஏளனமாகப் பார்த்துச் சிரிக்கின்றனர். ஆனால், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்த மிகப்பெரிய எடைகளை அந்த நபர் மிகவும் சுலபமாகத் தூக்கிக் காட்டியபோது, சிரித்தவர்களின் முகங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயின.

 

View this post on Instagram

 

A post shared by VLADIMIR1 & mr ANATOLY (@vladimirshmondenko)

“>

இந்தச் சம்பவம் “யாரையும் உருவத்தைக் கண்டு எடை போடக்கூடாது” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உண்மையில் அவர் ஒரு தொழில்முறை தடகள வீரர் அல்லது பளுதூக்கும் வீரராக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வெளித்தோற்றத்தை வைத்து ஒருவருடைய திறமையைத் தீர்மானிக்க முடியாது’ என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், பல கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.