உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சாக்கடை கால்வாயில் இருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு, அந்த வழியாக வந்த பூனை ஒன்றைத் தாக்க முயன்றது.
பொதுவாக பாம்புக்கும் கீரிக்கும் தான் சண்டை நடக்கும். ஆனால், இங்கே ஒரு பூனை அந்தப் பாம்பை எதிர்த்து நின்ற விதம் காண்போரை வியக்க வைத்துள்ளது.
அந்தப் பாம்பு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றபோதெல்லாம், பூனை தனது மின்னல் வேகப் பாய்ச்சலால் அதைத் தடுத்து நிறுத்தி மீண்டும் மீண்டும் தாக்கியது.
बिल्ली की फुर्ती,सांप की सुस्ती..
यूपी प्रतापगढ़ लालगंज एक गांव में बिल्ली-सांप में भिडंत.जहरीला सांप नाली से निकल बिल की तरफ भागा।बिल्ली की नजर सांप पर पड़ी तो सांप ने हमला किया।आपस में भीड़त हुई,करीब 10 मिनट बाद बिल्ली ने सांप को मार डाला।ग्रामीण लाइव कमेंट्री करते रहें! pic.twitter.com/h6ywyPfWgx— Tushar Rai (@tusharcrai) December 30, 2025
பாம்பும் பூனையும் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக மல்லுக்கட்டிய காட்சியைப் பார்த்த கிராம மக்கள், பயத்தில் ஓடாமல் அங்கேயே நின்று “லைவ் கமெண்ட்ரி” கொடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்தப் பாம்பு பூனையின் கழுத்தை இறுக்கி சுற்றப் பார்த்தது. ஆனால், சாமர்த்தியமாக அதிலிருந்து விடுபட்ட பூனை, பாம்பை ஓரம் கட்டி இறுதியில் அதைக் கடித்துக் கொன்றே விட்டது.
@tusharcrai என்ற எக்ஸ் (X) தளப் பயனர் இந்த வீடியோவைப் பகிர, “பூனைக்கிட்டயே உன்னோட ஆட்டத்தை காட்டுறியா?” என நெட்டிசன்கள் அந்தப் பாம்பைக் கிண்டல் செய்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
