லண்டன் இரயிலில் இந்திய நபர் ஒருவர் சமோசா விற்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிஹாரி சமோசா’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த நபர், பாரம்பரிய உடையில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு, இந்திய இரயில்களில் விற்பனை செய்வதைப் போலவே லண்டன் இரயில் பெட்டிகளுக்குள் சமோசாக்களை விற்று வருகிறார்.

இதைப் பார்த்த அங்கிருந்த இந்தியர்கள் மட்டுமின்றி, உள்ளூர் பயணிகளும் வியப்புடனும் ஆர்வத்துடனும் அவரிடம் சமோசாக்களை வாங்கி ருசித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறுகிய காலத்திலேயே ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. இந்திய தெருவோர உணவுகள் தற்போது எல்லைகள் கடந்து சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருவதை இந்தச் சம்பவம் காட்டுவதாக நெட்டிசன்கள் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Bihari Samosa UK (@biharisamosa.uk)

“>

அதே வேளையில், லண்டன் இரயில்களில் இது போன்ற விற்பனைக்கு அனுமதி உள்ளதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, லண்டன் மாநகரின் நவீன இரயிலில் இந்தியாவின் ‘தேசி’ மணம் கமழ்வது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.