சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், இளம்பெண் ஒருவர் 1000 ரூபாய் பணத்திற்காக ஒரு ஆணின் சவாலை ஏற்றுக்கொண்டு, இறுதியில் ஆண்களின் கடின உழைப்பைப் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல யூடியூபர் ஜெய் குமார் தவானி, “ஆண்களின் வாழ்க்கை கடினமானதா அல்லது பெண்களின் வாழ்க்கையா?” என்ற கேள்வியை எழுப்பியபோது, அந்தப் பெண் பெண்களின் வாழ்க்கைதான் மிகவும் கஷ்டமானது என்று வாதிட்டார்.
இதையடுத்து, ஒரு நாள் மட்டும் ‘ஆணாக’ வாழ்ந்து காட்டுமாறு அவருக்குச் சவால் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண், பொது இடத்தில் ஆடையை மாற்றிக்கொள்ள முடியாமல் தவித்தது முதல், வெயிலில் இளநீர் விற்பது மற்றும் கட்டுமானப் பணிகளில் செங்கற்களைச் சுமப்பது வரை பல்வேறு கடினமான வேலைகளைச் செய்ய நேரிட்டது.
View this post on Instagram
“>
மேலும் ஆண்களின் அன்றாடப் போராட்டங்களை நேரடியாக அனுபவித்த அந்தப் பெண், சிறிது நேரத்திலேயே சோர்வடைந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். “ஆணாக வாழ்வது மிகக் கடினம், என்னால் இனி முடியாது” என்று கூறிய அவர், கேமரா முன்பு கைகளைக் கூப்பி, “அனைத்து ஆண்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆண்களின் பொறுப்புகளையும் அவர்கள் குடும்பத்திற்காகச் சந்திக்கும் சவால்களையும் நகைச்சுவை கலந்த விழிப்புணர்வுடன் விளக்கும் இந்த வீடியோ, இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. பல நெட்டிசன்கள் “ஆண்களின் உழைப்பை யாராவது ஒருவராவது உணர்ந்தாரே” என்று இந்த வீடியோவை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
