உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள மெஸ்கோ (Mesco) பொதுப் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு குழுவினர் பர்தா அணிந்து மேடையில் நடனமாடியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தின் பாடலுக்கு, ஹிஜாப் மற்றும் பர்தாவை கேலி செய்யும் விதமாக அவர்கள் ஆடிய நடனம் இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பொழுதுபோக்கு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை இழிவுபடுத்தும் விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Location: Amroha, Uttar Pradesh (India 🇮🇳)
A video mocking Burqa/Hijab and Islam has gone viral, sparking serious outrage.
In the clip, a group of youths are seen wearing burqas and dancing to a song from the controversial film Dhurandhar, clearly ridiculing the hijab and Muslim… pic.twitter.com/9UmqrKLBPl— Team Rising Falcon (@TheRFTeam) December 30, 2025
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
“பள்ளிகள் என்பது ஒற்றுமையைக் கற்றுக்கொடுக்க வேண்டிய இடம்; ஆனால் அங்கே இப்படி ஒரு மதத்தை இழிவுபடுத்த அனுமதித்தது கண்டிக்கத்தக்கது” எனப் பொதுமக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அம்ரோஹா போலீஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனத் ‘டீம் ரைசிங் பால்கன்’ போன்ற அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
