பின்லாந்து நாட்டின் ரயில்களில் உள்ள நவீன வசதிகள் மற்றும் அதன் தூய்மையைக் கண்டு வியந்த இந்தியப் பெண் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ற எக்ஸ் தள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் ரயிலின் உட்பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார். அதில் ஒரு சொகுசு உணவகம் போலவே ரயிலின் இருக்கைகள், கை கழுவும் இடங்கள் மற்றும் உணவு வசதிகள் மிகத் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு வருகின்றனர்.
இந்தியாவின் பொருளாதாரம் பின்லாந்தை விட பல மடங்கு பெரியதாக இருந்தும், அங்குள்ள ரயில்வே வசதிகள் இவ்வளவு மேம்பட்டதாக இருப்பது எப்படி என்ற கேள்வியையும் அந்தப் பெண் எழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 78 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்குப் பயனர்கள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
फिनलैंड की रेलवे में सफर कर सुविधाएं और कंफर्ट देखने के बाद भारतीय लड़की हैरान रह गई।
भारत की GDP फिनलैंड की GDP से 13 गुना बड़ी है — भारत दुनिया की चौथी सबसे बड़ी अर्थव्यवस्था तो वही फिनलैंड 48वीं सबसे बड़ी अर्थव्यवस्था है।
इसके बावजूद फिनलैंड की रेल व्यवस्था हमसे बेहतर कैसे… pic.twitter.com/kScdW3f87T
— Dr. Sheetal yadav (@Sheetal2242) December 30, 2025
“>
ஒரு தரப்பினர் பின்லாந்தின் மக்கள் தொகை மிகக் குறைவு என்பதால் இதைப் பராமரிப்பது எளிது என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், இந்தியாவில் உள்ள ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ அல்லது ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ போன்ற சொகுசு ரயில்களிலும் இத்தகைய சர்வதேச தரத்திலான வசதிகள் பல ஆண்டுகளாகவே இருந்து வருவதைச் சுட்டிக்காட்டித் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
