தலைநகர் டெல்லியில் நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்தவர்களின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளார். சாதாரணமாக ஒருவர் செல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அந்த நபர் தனது ஸ்கூட்டரில் நான்கு வெவ்வேறு ரக நாய்களை ஏற்றிச் சென்றுள்ளார்.
ஸ்கூட்டியின் முன்னால் ஒன்று, பின்னால் மூன்று என அந்த நான்கு செல்லப்பிராணிகளும் எவ்வித பயமும் இன்றி, மிகவும் அமைதியாக அமர்ந்து காற்றாடிச் சென்ற காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
இந்த அழகிய காட்சியை அந்த வழியாகச் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது இப்போது “கியூட்” கமெண்டுகளுடன் வைரலாகி வருகிறது.
“மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே இருக்கும் அந்த உன்னதமான பிணைப்பிற்கு இதுவே சிறந்த உதாரணம்” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். டெல்லியின் பரபரப்பான சாலைகளுக்கு இடையே, தனது செல்லப்பிராணிகளுடன் அந்த நபர் காட்டிய பாசம், காண்போர் இதயங்களை மெருகேற்றி வருகிறது.
