ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடந்த திங்கட்கிழமை இரவு தனது தோழி வீட்டிற்குச் செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்துள்ளார்.

நள்ளிரவு நேரம் என்பதால் பேருந்து கிடைக்காத நிலையில், அந்த வழியாக வந்த ஒரு வேனில் அவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறியுள்ளார். ஆனால், அந்த வேனுக்குள் இருந்த இரண்டு நபர்கள் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், ஆள் நடமாட்டம் இல்லாத குர்கான் – ஃபரிதாபாத் சாலைக்குக் கடத்திச் சென்றனர்.

அடர்ந்த மூடுபனியைப் பயன்படுத்தி, ஓடும் வேனுக்குள்ளேயே அந்தப் பெண்ணை அந்த இரு நபர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

சுமார் 3 மணிநேரம் அந்தப் பெண்ணை சித்ரவதை செய்த அந்த கும்பல், அதிகாலை 3 மணி அளவில் ஓடும் வேனில் இருந்தே அவரை வெளியே தள்ளிவிட்டது. இதில் அந்தப் பெண்ணின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.