தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மக்களின் கருத்துக்களை நேரடியாகப் பெறுவதற்காக “AI” (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு பிரத்யேக செயலியை (App) நாளை அறிமுகம் செய்கிறார். இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள், புதிய திட்டங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பதிவு செய்யலாம். மக்கள் அளிக்கும் ஆயிரக்கணக்கான கருத்துக்களை வகைப்படுத்தி, முக்கியமானவற்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்க்க இந்த AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக திமுக தரப்பில் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்துக் கருத்து கேட்க உள்ளனர். நேரில் வர முடியாதவர்கள் இந்தச் செயலி மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
