ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவரும் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பை கட்டாயம் முடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்காக கார்டில் உள்ள அனைவரும் ரேஷன் கடைக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சரிபார்ப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கத் தவறினால், வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் உங்கள் கார்டுக்கு வழங்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

​மிக முக்கியமாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்க இருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும் e-KYC முடிக்காதவர்களுக்குக் கிடைக்காது என்று கூறப்படுகிறது. எனவே, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், அரசின் சலுகைகளைத் தடையின்றிப் பெறவும் இப்போதே உங்கள் ரேஷன் கடைக்குச் சென்று இந்தச் சரிபார்ப்பை முடித்துவிடுவது நல்லது. இது உங்கள் கார்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்கான எளிய நடைமுறைதான்.