சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில், போர்க்களத்தில் ஒரு ராணுவ டாங்க் அருகே நின்று வீரர்கள் சிலர் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

டாங்கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்த வீரர்கள் காத்திருக்கிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு அங்கே வந்து, ஏவுகணையை ஏவும் ‘சிவப்பு பட்டனை’ அழுத்தி விடுகிறது. இதனால் வீரர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏவுகணைகள் சீறிப்பாய, பதறிப்போன ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ உண்மையில் நடந்தது அல்ல; இது ‘AI’ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ ஆகும்.

“>

 

@Tahkeek_KSA என்ற (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தக் குரங்கு தான் உண்மையான ஹீரோ” என்றும், “இது ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறது போல” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராணுவ வீரர்களையே ஓடவிட்ட இந்தக் குரங்கின் வீடியோ இப்போது இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது.