பெங்களூரு பசவேஸ்வர நகரில் வசித்து வரும் கீதா என்ற பெண்ணின் 19 வயது மகளை, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்து அபிமன்யு என்ற வாலிபர் திருமணம் செய்து கேட்கத்துள்ளார்.
பெண் இன்னும் சிறியவள் எனக் கூறி கீதா மறுத்ததோடு, முத்துவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுத் திருமணப் பேச்சைத் துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்து, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கீதாவின் வீட்டிற்குள் புகுந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் 50 சதவீத தீக்காயங்களுடன் கீதா தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.
கீதாவை எரித்துக் கொல்ல முயன்றுவிட்டு பெங்களூருவில் இருந்து தப்பி ஓடிய முத்து அபிமன்யுவைத் தேடி வந்த கர்நாடக போலீஸார், தொழில்நுட்ப உதவியுடன் அவர் தமிழகத்தில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
இன்று (டிசம்பர் 29) தமிழகத்தில் வைத்து அவரை அதிரடியாகக் கைது செய்த போலீஸார், பெங்களூரு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக அதே வீட்டில் தங்கியிருந்து உதவி செய்த ஒருவரே, திருமணத்திற்கு மறுத்ததற்காகத் தீ வைத்துக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
