பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி அவர்கள் ஒரு அதிரடியானக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவர் ராமதாஸ் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்களை எல்லாம் அழைத்து வந்து, அன்புமணி ராமதாஸ் அவர்களுக்குப் பதவிகளை வாரி வழங்குவதாகக் மிகக் கடுமையானத் தொனியில் பேசியுள்ளார். பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து பாட்டாளி மக்கள் கட்சியையே அபகரிக்க அன்புமணி பார்ப்பதாகச் சாடிய அவர், இன்று மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கண்ணீர் வடிப்பதற்குக் காரணமே அவருடைய மகன்தான் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சியைப் பிடித்திருந்த ‘பீடை’ கடந்த டிசம்பர் 31-ம் தேதியோடு ஒழிந்துவிட்டதாகத் தெரிவித்த ஜி.கே. மணி, இனி கட்சியில் புதிய விடியல் பிறக்கும் என்று கூறினார். வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா வெற்றிக் கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் அவர்களே நேரடியாக முன்னின்று அமைப்பார் என்றும், அவர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் தனது பேச்சில் அவர் உறுதிபடக் கூறினார்.
