குருகிராமில் ஒரு தாய் தனது சிறு குழந்தையை இ-ரிக்ஷா ஓட்டுநரிடம் தவிக்கவிட்டு மது அருந்தச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது 4 வயது மகனை இ-ரிக்ஷாவிலேயே இருக்குமாறு கூறிவிட்டு, அருகில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தாய் வராததால் கவலையடைந்த ஓட்டுநர், குழந்தையின் பாதுகாப்பைக் கருதி உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
She got drunk and left her young son in an e-rickshaw.
Thankfully, male police officers found the child.
Marry a modern feminist woman at your own risk.
I’ve said this countless times. Such girls never become good wives or mothers.
What would you do if this was your son? pic.twitter.com/BxeFhNvADQ
— ︎ ︎venom (@venom1s) December 27, 2025
“>
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்டு தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். பின்னர் அங்கு வந்த அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார், உரிய எச்சரிக்கைக்குப் பிறகு குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் ஒரு தாயின் பொறுப்பற்ற இந்தச் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சாமர்த்தியமாகச் செயல்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுத்த இ-ரிக்ஷா ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
