விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வெளிப்படுத்திய மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. விமான நிலையத்தின் வருகை பகுதியில், தனது தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் ஒரு சிறுமி பாதுகாப்பு விதிமுறைகளை அறியாமல் அவரை நோக்கி ஓடினாள்.
அப்போது அங்கு பணியிலிருந்த பாதுகாப்புப் படை வீரர், அந்தச் சிறுமியை அதட்டாமல் மிகவும் கனிவாக வழிமறித்து, அவளது பாதுகாப்பை உறுதி செய்ததோடு, பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்படாமல் தந்தை-மகள் சந்திப்பு இனிதே நிகழ உதவினார்.
Sometimes, Duty Speaks the Language of Kindness.
At the arrival area, a little girl, overwhelmed with joy on seeing her father, rushed ahead without a second thought. With calmness and care, a CISF personnel gently stepped in — keeping her safe while ensuring security protocols… pic.twitter.com/62OFuxBIMM
— CISF (@CISFHQrs) December 27, 2025
“>
இந்த நெகிழ்ச்சியான காட்சியை சி.ஐ.எஸ்.எஃப் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. “கடமை சில நேரங்களில் கனிவின் மொழியில் பேசும்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, கடமை மற்றும் கருணை ஆகிய இரண்டும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இந்நிலையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும்போது கூட, ஒரு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அந்த வீரர் காட்டிய நிதானமும் பொறுமையும் இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
