சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலர் தங்கள் உயிரையே பணயம் வைத்து விபரீதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் ஆக்ரோஷமான கோபரா பாம்பை மேஜை மீது வைத்து, அதன் கண்களை உற்றுப் பார்த்து வசியம் (Hypnotize) செய்ய முயன்ற அதிரவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தப் பாம்பு படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தபோது, அவர் தனது முகத்தை மிக அருகில் கொண்டு சென்று எதையோ முணுமுணுத்துள்ளார். ஆனால், அந்த வசியம் எதுவும் வேலை செய்யாத நிலையில், அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து முதியவரின் கண்ணுக்குக் கீழே கொடூரமாகக் கொட்டியது.
— Viral News Vibes (@viralnewsvibes) December 27, 2025
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வீடியோ ‘மைக் ஹால்ஸ்டன்’ (Mike Holston) என்பவரால் பகிரப்பட்டு, இதுவரை கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் முதியவர் ஒரு பாம்பு பிடி நிபுணர் என்றும், இதற்கு முன்பே சுமார் 42 முறை அவரைப் பாம்புகள் கடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
“ஏற்கனவே ஒரு விரலை இழந்த இவருக்கு, இப்போது ஒரு கண்ணே போய்விடும் போலிருக்கிறதே” என இணையவாசிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நிபுணராக இருந்தாலும், விஷப் பாம்புகளிடம் இது போன்ற விபரீத விளையாட்டுகள் உயிருக்கே உலை வைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி.
