சமூக வலைதளப் பக்கங்களில் சிறு குழந்தைகளின் மழலை மாறாத சேட்டைகளும் அவர்களின் தனித்திறமைகளும் அவ்வப்போது வைரலாவது வழக்கம் அந்த வகையில் அழகான பாட்டியாலா உடை அணிந்த சிறுமி ஒருவர் மேள தாளங்களுக்கு ஏற்ப எவ்வித தயக்கமும் இன்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடனமாடும் காணொளி தற்போது இணையத்தில் பலரது மனங்களையும் வென்று வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Anjali Kumari (@anjali____official56)

தனது கைகளில் பணத்தாள்களை ஏந்தியபடி அந்தச் சிறுமி வெளிப்படுத்தும் உற்சாகமான நடன அசைவுகளும் முக பாவனைகளும் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளின் இத்தகைய கள்ளமில்லாத சிரிப்பும் மகிழ்ச்சியும் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக அமைவதாக இணையவாசிகள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்தக் காணொளி அந்தச் சிறுமியின் இயல்பான திறமையை வெளிப்படுத்துவதுடன் சமூக வலைதளங்களில் பலராலும் ரசிக்கப்பட்டு தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.